சீமானை வெறுப்பேற்றுவதற்காக ரஜினி பிரபல நடிகைக்கு உதவினாரா? தீயாய் பரவும் தகவல்

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகை விஜயலட்சுமிக்கு நடிகர் ரஜினி உதவி செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

தமிழில் விஜய் நடிப்பில் உருவான பிரண்ட்ஸ் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சில தினங்களுக்கு முன்பு, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், நான் நரகத்தில் இருக்கிறேன், நான் ரஜினியை பார்க்க வேண்டும், அவரிடம் உதவி கேட்க வேண்டும், அவரை தான் கடைசியாக நம்பியிருக்கிறேன் என்று கண்கலங்கிய படி கூறியிருந்தார்.

இந்த வீடியோ வெளியான அடுத்த 24 மணி நேரத்தில் விஜயலட்சுமி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதை பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்.

அவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடையை எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.

ரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. இப்போது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினி இப்படி உதவி செய்ததற்கு முக்கிய காரணம் சீமானை வெறுப்பேற்றுவதற்காகவே என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது.

ஏனெனில், கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை காதலித்து குடும்பம் நடத்திவிட்டு, இப்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக புகார் கொடுத்திருந்தார். சீமான் மீது பல்வேறு அவதூறுகளை விஜயலட்சுமி கூறி வந்தார்.

ரஜினியை அரசியல் ரீதியாக சீமான் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்