தந்தையின் சடலத்தின் முன் காதலியை கரம்பிடித்த மகன்! கண்கலங்க வைக்கும் சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் தந்தையின் சடலத்தின் முன்னே மகன் காதலியை திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி, இவருடைய மகன் அலெக்சாண்டர்(வயது 27). இவர் மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரும், அதே பள்ளியில் பணிபுரியும் ஜெகதீஸ்வரி என்பவருக்கும் காதல் மலர்ந்தது, இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதன்படி அடுத்த மாதம் 2ம் திகதி மயிலம் முருகன் கோயிலில் திருமணம் நடத்த பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தெய்வமணி நேற்று திடீரென காலமானார்.

தந்தையின் மீது அதிக பாசம் கொண்ட அலெக்சாண்டர், அவரது ஆசிர்வாதம் பெற்று திருமணம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.

இதற்கு உறவினர்களும் சம்மதம் தெரிவிக்க, சடலத்தின் முன் காதலியின் கழுத்தில் தாலி கட்டினார், அப்போது அலெக்சாண்டர் கதறியழ கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்