கணவரை பிரிந்து தோழியுடன் ஓட்டம் பிடித்து ஒன்றாக குடும்பம் நடத்தும் மனைவி... அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தாலி கட்டிய கணவனை பிரிந்து சென்ற மனைவி ஆணாக மாறிய தனது தோழியுடன் குடும்பம் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, ஆனையூரைச் சேர்ந்தவர் சுகன்யா (27). 2007ல் இவர் அரசு பள்ளி ஒன்றில் படித்த போது உடன் படித்தவர் தான் எப்சிபா. இருவரும் மிகவும் நெருக்கமான தோழிகளாக இருந்தார்கள்.

ஆனால் எப்சிபா பெண்ணாக இருந்த போதிலும் நாளடைவில் பாலின மாறுபாடு காரணமாக, ஆணாக மாற தொடங்கினார்.

நாளடைவில் சுகன்யா வளர்ந்ததும் ராஜேஷ் என்பவருக்கு அவர் பெற்றோர் கடந்த 2012-ல் அவரை திருமணம் செய்து வைத்தார்கள்.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் ராஜேஷ் திடீரென விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி விட்டார்.

இந்த சூழலில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சுகன்யா சில மாதத்துக்கு முன்னர் சென்ற போது அங்கே எப்சிபாவை மீண்டும் சந்தித்தார்.

இவர் ஆபரேஷன் செய்து திருநங்கையாக மாறி விட்டதாக தெரிகிறது. பெயரை கூட கெய்சன் ஜோஸ்வா என மாற்றி வைத்துக் கொண்டுள்ளாராம்.

எப்சிபாவை அதிக நாள் கழித்து பார்த்ததால், நீண்ட நேரம் இருவரும் மனம் விட்டு பேசியதோடு செல்போன் நம்பர்களை மாற்றி கொண்டார்கள்.

அப்போதுதான் கணவர் நடக்க முடியாமல் வீட்டில் முடங்கிய விடயம் எப்சிபாவுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து எப்சிபா, நான் இருக்கேன் உனக்கு, நீ எதுக்கும் கவலைப்படாதே, என்னுடன் வந்து விடு, புதிதாக ஒரு வாழ்க்கையை தொடங்கலாம் என கூறி சுகன்யாவை மயங்கினார்.

இதை ஏற்று கொண்ட சுகன்யா எப்சிபாவுடன் சென்ற நிலையில் இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்கள்.

இது குறித்து அறிந்த சுகன்யாவின் கணவர் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்து அவரை மீண்டு தங்கள் வீட்டுக்கு அழைக்க அவர் மறுத்துள்ளார்.

மேலும் தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க சுகன்யா பொலிஸை நாடினார்.

பொலிசார் சுகன்யாவிடம் நேற்று பேச்சுவாரத்தை நடத்தினர். ஆனால் எப்சிபாவை விட்டு வர மறுத்துவிட்டார் சுகன்யா.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்