இலங்கை மலையக மக்களை நேரில் சென்று சந்தித்த சுஷ்மா.. என்ன செய்தார் தெரியுமா? இலங்கை எம்.பி உருக்கம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் இருப்பு பெண்மணியாக புகழப்படும் மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான் இரங்கள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும்,பாஜக கட்சியின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் ஆகஸ்ட் 6ம் தேதி இரவு காலமானார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சுஷ்மா சுவராஜ் உடல் முழு அரசு மரியாதையுடன் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு உலக தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமானும் இரங்கள் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகம் தொண்டைமான் கூறியதாவது, சுஷ்மாவின் மறைவு இலங்கைக்கு மட்டும் அல்ல இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு பேரிழப்பாகும்.

மலையக மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைத்த முதல் வெளியுறுவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான். சுஷ்மா எடுத்து நடவடிக்கையால் தான் மலையக மக்களுக்கான வீட்டு திட்டம் வந்தது.

சுஷ்மா மறைவை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரை நேரில் சந்தித்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தோம், இந்திய பிரதமர் மோடிக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் படி கூறினோம் என ஆறுமுகம் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்