1 ரூபாய் கட்டணம்..! இறுதி நிமிடங்களில் போனில் என்ன சொன்னார் சுஷ்மா: வழக்கறிஞர் ஓபன் டாக்

Report Print Basu in இந்தியா

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக போனில் உரையாடியது குறித்து மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உருக்கமாக கூறியுள்ளார்.

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் பணியாற்றியதற்காக 1 ரூபாய் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு என்னிடம் தொலைபேசியில் கூறியவர் அடுத்த 10 நிமிடங்களில் காலாமானார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது எனக் கூறியுள்ளார் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே.

உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (49) பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து நெதர்லாந்தில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஜாதவுக்காக வாதாடிய ஹரிஷ் சால்வே ஆழ்ந்த வருத்தத்துடன் கூறியதாவது, .சுஷ்மா ஸ்வராஜ் எனது சகோதரி போன்றவர். ஜாதவ் வழக்கில் அவர் எடுத்த முயற்சிகள் அளப்பரியது. அவர் பதவிக்காலத்தில் அவரின் பார்வைக்குச் செல்லாமல் ஜாதவ் வழக்கு தொடர்பாக ஒரே ஒரு தாள்கூட வெளியே செல்ல முடியாது.

அந்த வழக்கில் ஆஜரானதற்காக நான் கோரியிருந்த 1 ரூபாய் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது மறைவுச் செய்தி வந்தது. என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பொது வாழ்வில் பெரிய வெற்றிடத்தை அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்