தினமும் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த நடிகர்: வேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு

Report Print Vijay Amburore in இந்தியா

பிரபல சின்னத்திரை நடிகரான மது பிரகாஷின் மனைவி திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்து புகப்பெற்ற பாகுபலி படத்தில் சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் மது பிரகாஷ்.

இவர் கடந்த 2015ம் ஆண்டு பாரதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு சின்னத்திரையிலும் நடித்து வருவதால், மது பிரகாஷ் தினமும் இரவு தாமதமாக வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

மாமியாருடன் தனிமையில் வீட்டில் இருந்து வந்த பாரதிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பெரும் வருத்தத்தில் இருந்த பாரதி அடிக்கடி கணவருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மது பிரகாஷ் தனது மனைவியிடம், ஜிம்மிற்கு செல்வதாகவும், பின்னர் அங்கிருந்து சீரியல் செட்டிற்கு நடிக்க செல்வதாகவும் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கணவருக்கு போன் செய்த பாரதி, வீட்டிற்கு திரும்பி வரும்படி கேட்டார். அப்படி வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இரவு 7.30 மணியளவில் மது பிரகாஷ் வீடு திரும்பியபோது, பாரதி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்