உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து பெண் பொலிஸ் செய்த மோசமான செயல்.... கதறும் டிராவல் அதிபர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்த நபர், பெண் பொலிஸ் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பெண் பொலிஸ் மற்றும் அவரது தோழி நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

கோயமுத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். டிராவல்ஸ் அதிபரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவன் சதீஷின் நடவடிக்கை எதுவும் சரியில்லாததால், மனைவி விவகாரத்து பெற்று குழந்தைகளை தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கோயமுத்தூர் மாவட்ட எஸ்பியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தில் சூலூர் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் வேலை பார்த்து வந்தார்.

அவர் மூலம் பெண் போலீஸ் எனக்கு அறிமுகம் ஆனார். இந்த விஷயம் என்னுடைய மனைவிக்கு தெரிய வந்ததால் குழந்தையுடன் அவர் பிரிந்து சென்றுவிட்டார். நான் பெண் பொலிசுடன் நெருக்கமாக இருந்தேன். அவரை ஊட்டி, மைசூரு, திருநள்ளாறு, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு அழைத்துச்சென்றேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, அத்திவரதர் தரிசனத்துக்கு பெண் பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்து என்னை அத்திவரதரின் அருகில் தரிசனத்துக்கு அழைத்துச்சென்றார்.

எனது அலுவலகத்தில் கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டு இருந்தது. நான் பெண் போலீசுடன் உல்லாசமாக இருந்தபோது எனது அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவை பெண் ஊழியர், பெண் பொலிசாரிடம் கொடுத்துவிட்டார்.

அதன் பின் அவர்கள் இருவரும், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று என்னை மிரட்டினார்கள். வீடியோ வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று கேட்கின்றனர். நாங்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் திகதி யூடியூப்பில் வெளியிட்டனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அந்த பெண் பொலிஸ் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டனர். சீருடையுடன் இருந்துகொண்டு பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்ததால் அவருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

அதன் பின்னரும் இன்னும் 2 ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதனை என்னுடைய மனைவி உள்ளிட்டவர்களிடம் கொடுக்க போவதாகவும், சமூக வலைத்தளத்தில் வெளியிட போவதாகவும் மிரட்டுகின்றனர்.

இதுவரை அந்த பெண் பொலிஸ்.3 லட்சம் வரை பறித்துக்கொண்டார். தற்போது அந்த பெண் பொலிஸ் கோவையில் ஆயுதப்படையிலும், தோழி சென்னையிலும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...