உடல் முழுவதும் தீப்பற்றி போராடிய மனைவி: கணவன் செய்த கேவலமான காரியம்

Report Print Vijay Amburore in இந்தியா
390Shares

திருவாரூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் - மைதிலி தம்பதியினருக்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதியினருக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்தின் போது மைதிலி வீட்டில் இருந்து 50 சவரன் நகை மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்திருந்துள்ளனர்.

ஆனால் அது போதாது என அருண் குடும்பத்தினர் கார் உட்பட இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென மைதிலி தன்னுடைய உடலில் தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அந்த சமயத்தில் கூட உயிருக்கு போராடி கொண்டிருந்த மைதிலியின் கழுத்திருந்த தாலி செயினை அருண் பறித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

80 சதவீத தீக்காயங்களுடன் மைதிலி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பம் முதலே தன் முகம் அழகாக இல்லை என்றும் வரதட்சணை கேட்டும் கணவன், மாமியார் மற்றும் மாமனார் தன்னை கொடுமைப்படுத்தியதாக மைதிலி மாவட்ட குற்றவியல் நடுவரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்