திருமணமான மூன்றாம் நாள் இரவு புதுப்பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாத கணவன்

Report Print Raju Raju in இந்தியா
756Shares

இந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண், கணவர் மற்றும் குடும்பத்தாரை மயக்கமடைய செய்துவிட்டு பணம், நகைகளுடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கன்ஹய்லால். இவருக்கும் பூஜா என்ற இளம்பெண்ணுக்கும் மூன்று நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு பூஜா, கணவர் வீட்டில் இருந்தார். அப்போது கன்ஹய்லாலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 16 பேர் வீட்டில் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் இரவு உணவை சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் பூஜா தேனீர் கொடுத்தார்.

தேனீரை குடித்த பின்னர் அனைவரும் மயக்கமடைந்தனர்.

இதையடுத்து வீட்டின் அறையில் இருந்த ரூ 40 ஆயிரம் பணம், தங்க நகைகள், விலையுயர்ந்த உடைகளுடன் பூஜா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார், உடன் அவர் சகோதரரும் கிளம்பி சென்றார்.

இதையடுத்து அடுத்த நாள் காலை உறவினர் ஒருவர் கன்ஹய்லா வீட்டுக்கு வந்த போது அங்கு அனைவரும் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அனைவரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், தனது மனைவியின் செயலால் கன்ஹய்லா கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பூஜா மற்றும் அவர் சகோதரரை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்