அன்று மல்லிகைப் பூ... புடவை என ஆளே மாறி போய் வந்த நிர்மலா தேவியின் பரிதாப நிலை... எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
697Shares

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி, தற்போது விரக்தியின் பிடியிலும், அதீத மன அழுத்தத்தினால் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி பார்க்கவே ஆள் முற்றிலும் மாறிப் போய் மல்லிக்கை பூ, அழகான புடவை என வந்திருந்தார்.

அப்போதுநீதிமன்ற வளாகத்தில் நளினி திடீரென்று வினோதமாக நடக்க தொடங்கினார். நன்றாக இருந்த முடியை வெட்டி காதில் தொங்க விட்டு கொண்டார்,

பிறகு அவிழ்த்து கொண்டார், காமாட்சி அம்மன் முதல் தர்கா வரை ஒரே நாளில் அருப்புக்கோட்டையை தலைவிரி கோலத்துடன், அலற வைத்தார்.

இதனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரோ, மன அழுத்தத்தினால் இப்படி நடந்து கொண்டுள்ளாரோ என்ற சந்தேகமும், குழப்பமும் நமக்கு ஏற்பட்டது.

ஆனால் மறுநாளே ஆள் எதுவும் நடக்காதது போல் இருந்தார். அதன் பின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்று அவரே வக்கீலுக்கு போன் செய்து கேட்டுக் கொண்டார்.

அது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகின.

இந்நிலையில், 4 நாளைக்கு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஆனால் அப்போதும் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. தன் வக்கீல் மூலம் விடுப்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதனால் வழக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

இதையடுத்து நிர்மலா தேவி தற்போது அதீத மன அழுத்தத்தில் இருப்பதால், மனநல மருத்துவமனையில் அட்மிட்டே ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக நிர்மலாதேவி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 நாட்கள் தங்கி அவர் அங்கு சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வரும் 5-ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது. அதற்குள் சிகிச்சையும் முடிந்துவிடும். அன்றைய தினம் நிர்மலாதேவி எப்படி இருப்பார், அவரது மனநிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிடும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்