லண்டனில் இருக்கும் நளினி மகளின் திருமணம் எங்கு நடக்கிறது? அக்காவை ஏன் பார்க்கவில்லை? தம்பி உருக்கம்

Report Print Santhan in இந்தியா
1205Shares

தமிழகத்தில் பரோலில் இருந்து வெளி வந்திருக்கும் நளினியை அவருடைய தம்பி இன்னும் பார்க்க போகாத நிலையில், அதற்கு என்ன காரணம் என்பதையும், நளினி மகளின் திருமணத்தைப் பற்றியும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி நேற்று லண்டனில் இருக்கும் தன் மகளின் திருமணத்திற்காக ஒரு மாதம் நிபந்தனையோடு பரோலில் வந்திருக்கிறார்.

அவர் தன் மகளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை லண்டன் மாப்பிள்ளை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி மகளின் திருமணத்தை தன்னுடைய அம்மா குடியிருக்கும் பகுதியில் நடத்த நளினி ஆசைப்பட்டிருக்கிறார்.ஆனால் அங்கு விஐபிக்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படலாம் என்ற பின்னரே வேலூரில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

நளினி எப்போது வருவார்? அவருக்கு எப்போது பரோல் கிடைக்கும்? என்று அவரது குடும்பத்தினர் காத்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று நளினி வெளியில் வந்தார்.

ஆனால் குடும்பத்தினர் பலர் இருந்த போது, அவரின் தம்பி பாக்கியநாதன் மட்டு வரவில்லை. இதனால் அவரிடம் ஏன் வரவில்லை என்று கேட்ட போது, அக்காவிற்கு ஐந்து தினங்களுக்கு முன்னரே பரோல் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் திடீரென்று அது தாமதமானது. அதுமட்டுமின்றி நான் தாய் இல்லாத குழந்தையை வளர்த்து கொண்டிருக்கிறேன், அவளை நான் தான் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், பார்த்து கொள்ள வேண்டும், இத்தனை கடமைகள் இருக்கிறது.

அதுமட்டுமின்றி திடீரென்று ஆபிசில் லீவு கேட்க முடியாது. முதலில் ஐந்து தினங்களுக்கு முன்னர் வருவார் என்று கூறினார்கள். ஆனால் அக்கா வெளிவரவில்லை, அதன் பின் நேற்று கூறினர். ஆனால் இதுவும் உறுதியானதா என்பது தெரியாமல் லீவு போட முடியாது.

ஆனால் அக்காவை விரைவில் சென்று பார்ப்பேன். ஒரு தாய்மாமனாக நான் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்வேன், முன்னின்று நடத்தி வைப்பேன், அக்கா நீதிமன்றம் விதித்திருக்கும் நிபந்தனைகளை சரியாக கடைபிடித்தால் அவர் விரைவில் விடுதலையாவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இதுக்கு அரசியல் பிரமுகர்களும் மீடியாக்களும் அக்காவைப் பார்க்கிறதை தவிர்த்துட்டா, அவங்களுக்கெல்லாம் வாழ்நாள் முழுக்க நான் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்