சிதைந்து போன குடும்பம்... அனாதையான 8 மாத கைக்குழந்தை

Report Print Vijay Amburore in இந்தியா

புதுச்சேரியில் குடும்ப தகராறு காரணமாக 8 மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் சரவணன் - ராஜாமணி தம்பதியினர். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வழக்கம் போல புதன்கிழமையன்று மதுகுடித்துவிட்டு வீடு திரும்பிய சரவணன் மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ராஜாமணி கணவர் வெளியில் சென்றிருந்த சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய சரவணன், மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், அனாதையான 8 மாத குழந்தையை திருச்சியை சேர்ந்த தம்பதியினரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மதுவால் ஒரு குடும்பமே சிதைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers