ஆட்சி கவிழ்ப்புக்கு பின் கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா!

Report Print Kabilan in இந்தியா

கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 எம்.எல்.ஏக்கள் பதவி விலகினர். அதனால், முதலமைச்சராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

ஆனால், 6 நாட்கள் நடந்த விவாதத்திற்கு பிறகு குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து, சுயேட்சை எம்.எல்.ஏ சங்கர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ரமேஷ் ஜர்க்கிஹோலி, மகேஷ் கும்தஹள்ளி ஆகியோரை அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலாவிடம், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். எனவே, இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்