வெளிநாட்டில் தொழில்! 4 மனைவிகள்.. கணவர் செல்போனை பார்த்த முதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா
1276Shares

துபாயில் தொழில் அதிபராக இருப்பதாக ஏமாற்றி 4 இளம்பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை குழந்தைகளுடன் தவிக்கவிட்டு நடன அழகிகளை தேடிச்சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த கோமலாதேவி என்பவர் தான், 4 திருமணம் செய்த தனது கணவர் கங்காதரனின் லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

கோமலாதேவிக்கும், துபாய் ரிட்டனான கங்காதரனுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணம் முடிந்த கையோடு கங்காதரன், மனைவியின் நகை மற்றும் குடும்ப பணத்தை கொண்டு துபாய் ஸார்ஜாவில் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததால் தனது மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று வீடெடுத்து தங்கவைத்துள்ளார்.

நாட்கள் சில கடந்த நிலையில் கங்காதரன் நடவடிக்கை சரியில்லாததை கண்டறிந்தார் கோமலா தேவி.

மனைவியிடம் இரவு நேரங்களில் வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு அங்குள்ள பப்புகளுக்கு சென்று நடன அழகிகளுடன் நெருக்கம் காட்டிய கங்காதரன், இதுகுறித்து விசாரித்த மனைவி கோமலாதேவியை இந்தியாவிற்கு அழைத்துவந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது

ஒருமுறை இந்தியா வந்த கங்காதரன் செல்போனுக்கு இரவு 12 மணிக்கு மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட கோமலா தேவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

எதிர்முனையில் பேசிய பெண் தன்னை கங்காதரன் மனைவி என அறிமுகம் செய்துகொண்டதோடு, தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அவரை கண்காணிக்க எண்ணிய கோமலா தேவி இரவு கங்காதரன் தூங்கும் வரை காத்திருந்து அவரது செல்போனை ஆய்வு செய்தபோது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

கவிதா மட்டுமின்றி சென்னையை சேர்ந்த யமுனா என்ற பெண்ணை 3 வதாக திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைபடங்கள் மற்றும் வாட்சப் உரையாடலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் கணவர் மீது கோமலாதேவி மோசடி புகார் அளித்துள்ளார், இதையடுத்து தான் திருந்தி விட்டதாக கங்காதரன் கூறியதை உண்மை என நம்பி தனது பெயரில் இருந்த கம்பெனியை மாற்றி எழுதிக்கொடுத்துள்ளார் கோமலாதேவி.

இந்நிலையில் கங்காதரன் தீபா என்ற பெண்ணை சமீபத்தில் 4 வதாக திருமணம் செய்து அவருக்கும் பெண் குழந்தை இருப்பதை அறிந்து கோமலா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த 4 பெண்களையும், நான் அவனில்லை சினிமா பாணியில் பெண்ணின் உறவினர்கள் முன்னிலையிலேயே கங்காதரன் திருமணம் செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட காலம் வாழ்ந்துவிட்டு குழந்தை பிறந்தவுடன் தவிக்கவிட்டு அடுத்த திருமணத்திற்கு தயாராகி சென்றுவிடுவதாகவும் கோமலா தேவி கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பொலிசார் கங்காதரனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்