நடுவானில் பறக்கும் விமானத்தில் 6 மாத குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில், நடுவானில் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவிலிருந்து டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 6 மாத குழந்தையுடன் பயணித்துள்ளனர்.

குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே உள்ள இதயக் கோளாறை சரிசெய்ய சிகிச்சைக்காக அவர்கள் டெல்லி புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைக்குச் செல்லும் வழியில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதையறிந்த சக பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை அடைந்ததும் பொலிசார் குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்