சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆசையை ஊட்டியது யார்? ஜீவஜோதியின் மறைக்கப்பட்ட மறுபக்கம்

Report Print Santhan in இந்தியா
2470Shares

தமிழகத்தில் ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக அறிவிக்கப்பட்ட சரவணபவன் ராஜகோபால், உடல்நிலை சரியில்லாமல் சமீபத்தில் உயிரிழந்தார்.

இவ்வளவு பெரிய கொலை சம்பவத்தை செய்துவிட்டு, அவர் ஒருநாள் கூட சிறை செல்லவில்லை, இது என் மனதில் ஆறாதவடுவாக இருக்கும் என்று ஜீவஜோதி வேதனையுடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று அண்ணாச்சிக்கு ஆசையை ஊட்டியது யார்? ஜீவஜோதியின் மறுபக்கம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில்,ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில், பூந்தமல்லி அளித்த தீர்ப்பில் சந்தர்ப்ப சாட்சியங்களை பார்க்கும் போது, ஜீவஜோதியை அடைவதற்கு ராஜகோபாலுக்கு தூண்டுதலாக இருந்தது, ஜீவஜோதியின் தயார் தவமணி என்பது தான் தெரியவருகிறது.

ராஜகோபாலுக்கு ஜீவஜோதியை திருமணம் செய்து வைப்பதாக கூறி ஆசை ஊட்டியதே தவமணி தான் என்பது தெரியவருகிறது.

அவரும் குற்றவாளி தான் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் போது ஜீவஜோதி நாங்கள் பிழைப்பு தேடி வந்த போது, கையில் இருந்த பணத்தை ராஜகோபாலிடம் கொடுத்து அதற்கான வட்டித் தொகையை பெற்று வந்ததாகவும், தன்னுடைய தந்தைக்கு ராஜகோபால் சரவண பவன் உணவகத்தில் வேலை கொடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இதனால் ஜீவஜோதிக்கு 13 வயது இருக்கும் போதிலிருந்தே அவருடைய குடும்பத்தினருக்கு ராஜகோபால் ஆதரவு கொடுத்து வந்துள்ளார்.

இவர்கள் தங்குவதற்கு சரவணபவன் குடியிருப்பில் அண்ணாச்சி வீடு ஒதுக்கி கொடுத்ததால், அந்த வீட்டிற்கு வந்த போது, பிரின்ஸ் என்ற நபர் டியூசன் எடுக்க வந்துள்ளார்.

அப்போது இவன் வந்தால் எனக்கு பிடிக்காது என்று கூற, அந்த கட்டத்தில் தான் ஜீவஜோதிக்கு பிரின்ஸ் மீது காதல் வந்துள்ளது. இவர் தன் தாய், ராஜகோபால் ஆகியோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்.

அப்படி திருமணம் செய்தவர், மீண்டும் ராஜகோபாலை தேடி வந்து டிராவல் பிசினஸிற்கு பணம் வேண்டும் என்று கேட்க, ராஜகோபாலும் பழைய பாசத்தை விட மனமில்லாமல், அவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.

அதன் பின் ஜீவஜோதியின் கணவன் அவரை சினிமாவில் நடிப்பதற்க் ஊக்கப்படுத்த, இதை அறிந்த ராஜகோபால் சினிமா எல்லாம் எனக்கு பிடிக்காது, நீ நடிக்காதே என்று கூறியுள்ளார்.

ஆனால் ஜீவஜோதியோ அதெல்லாம் முடியாது என்று கூறவே, ராஜகோபாலின் விசுவாசிகள் சிலர் அந்த பொண்ணு உங்களை பணம் காய்க்கும் மரமாக நினைத்துள்ளது என்று உசுப்பேற்ற, அதன் பின்னரே பிரின்ஸ் கடத்தலும், கொலையும் நடந்துள்ளது.

இதனால் அண்ணாச்சி சரிவை சந்தித்தார். ஜீவஜோதியோ தண்டபணி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

அப்போது ஜீவஜோதியை ராஜகோபால் கடத்த முயன்றதால் அந்த வழக்கு வேதாரண்யம் காவல்நிலையத்தில் புகார் ஆனது, இந்த வழக்கின் போது ஜீவஜோதி நீதிமன்றத்தில் அந்தர் பல்டி அடித்து பேசினார்.

அதாவது அவர் கடத்தவே இல்லை என்று ஜீவஜோதி கூற, ராஜகோபால் உட்பட சிலரை நீதிமன்றம் விடுவிக்கிறது.

எதற்காக இப்படி ஜீவஜோதி அந்தர் பல்டி அடித்தார் என்று அப்போது விசாரித்த போது, ஜீவஜோதியின் இரண்டாவது கணவர் ராஜகோபாலிடம் சில லட்சங்களை வாங்கிக் கொண்டு சமரசம் ஆகிவிட்டார் என்று தகவல் வெளியானது.

இதன் காரணமாகவே ஜீவஜோதி அப்படி பேசியுள்ளார். ஏன் இப்படி மாற்றி பேசினீர்கள் என்று கேட்ட போது, ஜீவஜோதி பத்திரிக்கையாளர்களிடம் எல்லாம் என் தலைவிதி என்று மட்டுமே கூறி சென்றார்.

அண்ணாச்சி ராஜகோபாலுக்கும் சட்டம் ஆயுள் தண்டனை வழங்கினாலும், அவர் ஒரு தண்டனையும் அனுபவித்து விடக் கூடாது என்பதற்காக, அவர் கும்பிட்ட முருகன் மரண தண்டனை வழங்கிவிட்டார்.

கடைசி கட்டத்தில் அண்ணாச்சியின் இந்த நிலைக்கு காரணமான நபர்களுக்கு எந்த ஒரு தண்டனையும் கொடுக்கவில்லையே? இதுவா நீதி என்று அண்ணாச்சியின் விசுவாசி ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்