காதலியுடன் வீட்டில் இருந்த கணவன்... இருவரையும் அடித்து உதைத்த மனைவியின் துணிகர வீடியோ

Report Print Santhan in இந்தியா
999Shares

இந்தியாவில் காதலியின் வீட்டில் தங்கியிருந்த கணவனை கையும் களவுமாக பிடித்து அவரை சரமாரியாக தாக்கிய மனைவியின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தை சேர்ந்த லஷ்மன் மற்றும் சுஜன்யா தம்பதியினருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.

இவர்கள் அங்கிருக்கும் கொம்மு கூடம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கூக்கட்பள்ளியில் உள்ள அனுஷா என்கிற பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி லஷ்மன் சென்று வந்துள்ளார்.

இதனால் இது குறித்து சுஜன்யா கேட்ட போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதன் பின் அனுஷாவின் வீட்டிற்கு சென்ற லஷ்மன் அதன் பின் வீடு திரும்பவே இல்லை.

இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சுஜன்யா, லஷ்மனைவிட்டு பிரிந்து சென்று, லஷ்மனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் அதற்கும் லஷ்மன் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்து வந்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர், கள்ளக்காதலியுடன் அவர் தங்கி வரும் வீட்டிற்கு நேரடியாக சென்று, இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

அதன் பின் அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

கள்ளக்காதல் கிரிமினல் குற்றம் இல்லை என்று சில மாதங்களுக்கு முன் உத்தரவு வந்தாலும், முதல் மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த லஷ்மனின் வழக்கு முதல் மனைவியின் ஆட்சேபனை என்கிற அடிப்படையிலும், சுஜன்யா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்க்கு பதில் சொல்லாததால், ஷோ காஸ் என்கிற அடிப்படையிலும் லஷ்மன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்