போர்த்திறம் பழக்கு.. விட்டுப்போகட்டும் வழக்கு! வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து

Report Print Kabilan in இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட வைகோவுக்கு, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவராக பதவியேற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, உரையாற்றிய அவர் தனது முதல் கேள்வியை மாநிலங்களவையில் எழுப்பினார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்த தனது வாழ்த்துக்களை கவிதையாக வைகோவுக்கு தெரிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

‘சிறுத்தைபோல் நடந்து சென்றாய்

செம்மொழி உறுதி பூண்டாய்

நிறுத்தவே முடியவில்லை

நீள்விழி வடித்த கண்ணீர்

போர்த்திறம் பழக்கு - விட்டுப்

போகட்டும் வழக்கு - உன்

வார்த்தைகள் முழக்கு - நீ

வடக்கிலே கிழக்கு’ என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்