பதவியேற்ற பின் பாராளுமன்றத்தில் வைகோ எழுப்பிய முதல் கேள்வி!

Report Print Kabilan in இந்தியா

பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று பதவியேற்றுக் கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது முதல் கேள்வியை எழுப்பினார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலங்களவை எம்.பியாக வைகோ மீண்டும் பதவியேற்றுள்ளார்.

அதன் பின்னர், அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது உறுப்பினர்கள் கைதட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் மூடப்பட்ட ஆலைகளால் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்பது குறித்து அமைச்சர் பதில் தருவாரா? என்று வைகோ தனது முதல் கேள்வியை எழுப்பினார்.

மேலும், சீனாவிலிருந்து ஆடைகளை பெறும் வங்கதேசத்தினர், அதனை சட்டவிரோதமாக இந்தியாவில் இறக்குமதி செய்வதே இந்த பின்னடைவுக்குக் காரணம். இதனை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, சீனாவில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதியாகவில்லை என தெரிவித்தார். ஆனால், அமைச்சரின் பதிலில் திருப்தியில்லை என்று கூறிய வைகோ,

‘அவைத்தலைவர் அவர்களே, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநிலங்களவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி’ எனக் கூறி தனது உரையை முடித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்