துணை நடிகை.. தினமும் ஒரு லட்சம் ரூபாய் என ஜாலியாக இருப்பேன்! இளைஞனின் அதிரவைக்கும் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து, பணத்தை கொள்ளையடித்த நபர் அந்த பணத்தை வைத்து நான் என் விருப்பப்படி போல் வாழ்ந்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு சமீபத்தில் புகார் ஒன்று வந்திருந்தது. அதில் அயனாவாரத்தில் இருக்கும் குறிப்பிட்ட ஏடிஎம் மிஷினில் படம் எடுத்தோம், அதன் பின் எங்கள் அக்கவுண்டில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக பணம் போய் கொண்டே இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் மத்திய குற்றப்பிரிவு பொலீசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில், கொளத்தூரைச் சேர்ந்த இர்பான், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அல்லா பக்கஷ், மாங்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாதி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இர்பான் அளித்த வாக்குமூலத்தில், சிறு வயதில் இருந்தே சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

ஆனால் நான் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்ததால், நான் பார்த்த வேலை எனக்கு அந்தளவிற்கு திருப்தி அளிக்கவில்லை.

அப்படி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றியபோதுதான் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டேன்.

தற்போது இருக்கும் சம்பாத்தியத்தில் இருந்தால், நாம் நினைத்த மாதிரி இருக்க முடியாது என்று குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று திட்டமிட்டேன்.

அதற்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தேன்.

இதனால் ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர்ஸ் கருவியை வைத்து அதன்மூலம் கார்டுகளின் விவரங்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பது தொடர்பான தகவல்களைச் இணையதளங்களில் சேகரித்தேன்.

அதன் பின் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம்.களை நோட்டமிட்டு, அங்கு ஸ்கிம்மர் கருவிகளையும், ரகசிய நம்பர்களை அறிந்து கொள்வதற்காக

ஏ.டி.எம். கீ போர்டு பகுதியில் ரகசிய கேமராவைப் பொருத்தினேன்.

இதை வைத்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் போலி ஏ.டி.எம் கார்டுகளை தயாரிக்க ஆரம்பித்தேன்.

இதனால் பணம் கொட்டியது, என் வாழ்க்கை ஸ்டைலே மாறியது. அப்போது தான் என்னை புதுச்சேரி பொலிசார் பிடித்துவிட்டனர். இதனால் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம்தான் வெளியில் வந்தேன்.

இதைத் தொடர்ந்து மீண்டும் இதே போன்று பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். அதற்கு அல்லா பக்கஷ், அப்துல் ஹாதி ஆகியோரை கூட்டாளிகளாக சேர்த்து கொண்டேன்.

சென்னையிலும் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர்ஸ், ரகசிய கேமராக்களை பொருத்தி போலி கார்டுகளைத் தயாரித்தேன்.

அப்படி அயனாவரத்தில் இருந்த குறிப்பிட்ட ஏ.டி.எம்மை குறி வைத்தேன். அதில் பதிவான ஏ.எடி.எம் கார்டுகளின் ரகசிய எண்களை தெரிந்து கொண்டு, போலி கார்டுகளை தயாரித்தேம்.

அந்த பணத்தை வைத்து, ஆடி கார் ஒன்றை வாங்கினேன். பார்ப்பதற்கு ஒரு பிசினஸ் மேன் போன்று இருக்க வேண்டும் என்று டிப்டாப்பாக வலம் வந்தேன்.

ஆனால் அயனாவரத்தில் வைத்திருந்த ஸ்கிம்மர்ஸ் கருவி, ரகசிய கேமராவால் சிக்கிக் கொண்டேன். அளவுக்கு அதிகமாக பணம் இருந்ததால் என் விருப்பப்படி வாழ்ந்தேன். துணை நடிகைகளின் அறிமுகமும் எனக்கு கிடைத்தது.

, இரவு 11 மணி முதல் தொடங்கி அதிகாலை வரைதான் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணத்தை எடுப்போம் என்றும் தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று கூறியுள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்