பணமோசடியில் சிக்கிய டோனி-சாக்ஷி..! உச்ச நீதிமன்ற தீர்ப்பால் வெளிச்சத்திற்கு வந்தது உண்மை

Report Print Basu in இந்தியா

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். டோனி பங்குதாரராக இருந்த நிறுவனத்திற்கு அம்ரபாலி குழுமம் சட்டவிரோதமாக வீட்டு உரிமையாளர்களின் பணத்தை திருப்பி அனுப்பியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டோனியை பிரபலபடுத்திய நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், வீடு வாங்குபவர்களின் பணத்தை குளறுபடி செய்ய அம்ரபாலி குழுமத்துடன் மோசடி ஒப்பந்தம் செய்ததாக உச்சநீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டது.

அம்ரபாலி வழக்கில் இன்று உச்சநீதிமன்ற வெளியிட்ட தீர்ப்பில், 2009 மற்றும் 2015 க்கு இடையில் அம்ரபாலி குழு, ரிதி நிறுவனத்திற்கு ரூ .42.22 கோடியை செலுத்தியதாக தடயவியல் தணிக்கை அறிக்கையை மேற்கோள் காட்டி உள்ளது. அதில், 6.52 கோடி ரூபாயை அம்ரபாலி சபையர் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 2015 ஐபிஎல்-யின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தனது லோகோவை விளம்பரப்படுத்தும் உரிமையை அம்ரபாலிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வெற்று காகிதத்தில் இருந்தது, அம்ரபாலிக்கும் ரிதிக்கும் இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. சி.எஸ்.கே சார்பாக யாரும் கையெழுத்திடவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில்; ரிதிக்கு நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்காக மோசடி ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களின் பணம் சட்டவிரோதமாகவும் தவறாகவும் ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு திசை திருப்பி அனுப்பபட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

மேலும், குறித்த ஒப்பந்தம் சட்டத்தின் சோதனையில் செல்லுபடி ஆகாது என்பதால், ரிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் யு.யூ.லலித் தீர்ப்பில் தெரிவித்தனர் .

முன்னதாக ரிதி நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவராக டோனி இருந்தபோதும், 2013 ஆம் ஆண்டில் அவர் முரண்பாடு காரணமாக விலக்கிக் கொண்டார், பின்னர் இது ரிதி விளையாட்டு இயக்குனர் அருண் பாண்டேவால் உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், ரிதியின் இணையதளத்தில் டோனியின் பெயர் இன்னும் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் பிராண்டுகளின் கீழ் உள்ளது.

அம்ரபாலியில் 100 க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் இருந்தன. டோனியின் மனைவி சாக்ஷி, அம்ரபாலி மஹி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு கிளை நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். குறித்த நிறுவனம் நிதிகளைத் திசைதிருப்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, டோனி இராணுவ பயிற்சியில் இருப்பதால், இந்த குளறுபடி குறித்து அவரது கருத்தை கேட்க அணுக முடியவில்லையாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்