5 ஸ்டார் ஓட்டலில் நடக்கும் அநியாயங்கள்...! பாலிவுட் நடிகர் வெளியிட்ட வீடியோ ஆதாரம்

Report Print Basu in இந்தியா

சண்டிகரில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் நடக்கும் அநியாயம் குறித்து பாலிவுட் நடிகர் வெளியிட்ட வீடியோவால் குறித்த ஓட்டலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கமலின் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ராகுல் போஸ், சண்டிகரில் உள்ள ஜே.டபிள்யூ மேரியட் சி.டி. நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

அவர் உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடுவதற்கு 2 வாழைப்பழங்களை ஆர்டர் செய்துள்ளார். 2 வாழைப்பழங்களுக்கு 442 ரூபாய் என வந்த பில்லை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே, தனக்கு பரிமாறப்பட்ட பழத்தையும், அதற்கு வந்த பில்லையும் வீடியோவாக பதிவு செய்த போஸ், இதை நம்ப நீங்கள் வீடியோவை பார்க்க வேண்டும். பழம் உங்கள் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று யார் சொன்னார்கள்? என ட்விட் செய்துள்ளார்.

அவர் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ உடனடியாக, நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்று அவர்கள் எதிர்வினையாற்றத் தொடங்கினர். சண்டிகர் துணை ஆணையர் மற்றும் கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் மந்தீப் சிங் பிரார், இந்த விவகாரம் குறித்து விசாரணையை முன்னெடுத்துள்ளதால் இப்போது விஷயம் தீவிரமாகி உள்ளது.

புதிய பழங்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசூலிக்கும் ஜிஎஸ்டி மீதான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் சுற்றிவரும் தகவல்களின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓட்டல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்