பெண் பிள்ளைக்கு தாயான இளம்பெண்... தந்தை என கூறி வந்த மூன்று இளைஞர்களால் ஏற்பட்ட குழப்பம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பிள்ளை பெற்றதை அறிந்து மூன்று இளைஞர்கள் தந்தை என கூறி மருத்துவமனைக்கு சென்று முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை அன்று 21 வயதான யுவதி ஒருவர் பிரசவ வலியுடன் சேர்ப்பித்துள்ளனர்.

அவருடன் கணவர் என அறிமுகம் செய்து கொண்ட இளைஞர் மருத்துவமனையில் அவருடன் ஒத்தாசையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஞாயிறன்று இரவு குறித்த யுவதி பெண் பிள்ளைக்கு தாயானார். இதனிடையே மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் ஒருவர் அந்த யுவதியின் பிள்ளைக்கு தாம் தந்தை என வாதிட்டுள்ளார்.

ஆனால் முன்னர் கணவர் என மருத்துவமனையில் அந்த யுவதியுடன் இருந்த இளைஞரை இவர் நேரில் பார்த்ததும், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், இருவரும் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் பொலிசாரை அழைத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு விரைந்து வந்த பொலிசார்,, இளைஞர்கள் இருவருடனும் ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து மருத்துவமனையில் இரண்டாவது வந்த இளைஞர் அந்த யுவதியுடன் எடுத்துக்கொண்ட திருமண சான்றிதழை பொலிசாரிடம் அளித்துள்ளார்.

ஆனால் அந்த இளைஞர் தமது மகளின் கணவரல்ல என அந்த யுவதியின் தாயார் முறையிட்டதால் பிரச்னை மீண்டும் வளர்ந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் யுவதியுடனே விசாரிக்க பொலிசார் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் யுவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த இளைஞர்கள் இருவரையும் பொலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அப்போது மூன்றாவது ஒரு இளைஞரும் பொலிசாரை நாடி, அந்த யுவதியின் கணவர் தாம் என வாதிட்டுள்ளார்.

ஆனால் சான்றிதழ் அளித்த இளைஞரே தமது கணவர் என யுவதி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த இருவரின் காதலை பெற்றோர் எதிர்த்த நிலையில், கருவுற்ற தம்மை திருமணம் செய்து கொள்ள யுவதி நிர்பந்தித்துள்ளார்.

ஆனால் தமக்கு திருமணம் குறித்து முடிவு செய்ய அவகாசம் வேண்டும் என அந்த இளைஞர் யுவதியிடம் கோரியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த யுவதி பொலிசாரிடம் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இளைஞர் யுவதியை திருமணம் செய்துகொண்டு முறைப்படி பதிவும் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்