இன்ஸ்டாகிராம் தவறை எப்படி கண்டுபிடித்தேன்? 20 லட்சம் வென்ற தமிழன்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் இன்ஸ்டாகிராமில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டி அதற்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வாங்கிய நிலையில், அதை நான் எப்படி சுட்டிக் காட்டினேன் என்பதை கூறியுள்ளார்.

தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் சாப்பாடு கூட ஒரு நாளைக்கு இருந்துவிடுவர். ஆனால் மொபைல் போன், நெட் இல்லாமல் இருக்கமாட்டார்கள்.

அந்தளவிற்கு செல்போன்கள் நம்மை அடிமையாக்கி வைத்துள்ளன. குறிப்பாக இந்த செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களி வேலை நேரம் போக, நாம் அதிகம் பயன்படுத்துவது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை தான்.

ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேஸ்புக்கில் இருந்த ஒரு சிறிய தவறால், 5 கோடி மக்களின் பேக்புக் அக்கவுண்ட்கள் ஹெக் செய்யப்பட்டன. இதனால் பேஸ்புக் பயனாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் அது சரி செய்யப்பட்டாலும், மக்களுக்கு ஒரு வித அச்ச உணர்வு இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மண் முத்தையா என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறி தவறு ஒன்று இருப்பதாக கூறி சுட்டிக் காட்டினார்.

இதனால் தவறை சுட்டிக் காடிய அவருக்கு அந்த நிறுவனம்20 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், என்னுடைய சொந்த ஊர் சிவகங்கை, நான் கல்லூரி படித்தது திருவள்ளூரில், CSE மாணவரான எனக்கு, ஆரம்பம் முதலே தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் இருந்தது.

இதன் காரணமாகவே தொழில்நுட்ப போடிகளில் கலந்து கொள்வேன். இது எனக்கு ஒன்றும் புதிதல்ல, கடந்த 2013-ஆம் ஆண்டு சில ஆப்களில் தவறுகளை சுட்டிக் காடியுள்ளேன்.

அதுமட்டுமின்றி 2015-ஆம் ஆண்டு பேஸ்புக்கிலும் பக் இருப்பதை கண்டுபிடித்தேன், அதற்கும் அவர்கள் சன்மானம் வழங்கினர்.

இது போன்று தான், இன்ஸ்டாகிராமில் மறந்துபோன பாஸ்வேர்டுகளை திரும்பப்பெறுவதற்கு, பயனர்களின் மொபைல் எண்ணுக்கு 6 டிஜிட் எண்கள் அனுப்பபடும்.

அப்படி அனுப்பப்படும், பதிவுகளை பதிவிட்டால், அதன் பாஸ்வேர்டுகளை மாற்ற முடியும்.

அனுப்பப்படும், 6 டிஜிட் எண்கள் மொத்தம் 10 லட்சம் வரை இருக்கும். இந்த 10 லட்சம் எண்களையும் internet protocal-ஐ பயன்படுத்தி எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

இந்தக் குறைபாட்டையே நான் கண்டுபிடித்தேன். அதனை வீடியோவாகப் பதிவுசெய்து அவர்களுக்கு அனுப்பினேன்.

அதன் பின்னரே அவர்கள் இப்படி ஒரு பக் இருப்பதைப் புரிந்துகொண்ட பின், இன்ஸ்டாகிராம் எனக்கு பரிசு அறிவித்தது. எதிர்காலத்திலும் இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்வேன் என்று கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்