தமிழகத்தில் வட மாநிலத்தவர்களால் பல சம்பவங்கள் நடக்கும்! எச்சரிக்கும் சீமான்

Report Print Kabilan in இந்தியா

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் மேயர் கொலை செய்யப்பட்டது போல, தமிழகத்தில் வட மாநிலத்தவர்களால் பல சம்பவங்கள் நடக்கும் என நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் வட மாநிலத்தவர்களால் பல சம்பவங்கள் நடக்கும் என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் ஒழுக்கத்தை வளர்க்கின்ற கல்வி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொடூரமான கொலை செய்யப்பட்டதில், வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகம் அடைந்துள்ளது.

வட மாநிலத்தவர்கள் ஏராளமானவர்கள் தமிழகத்தில் புகுந்துள்ளதால், இனி இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்