சென்னை மாணவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்! மற்றொரு அதிர்ச்சி வீடியோ

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் பேருந்து ரூட்டு பிரச்சனை காரணமாக மாணவர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நேற்றைய தினம் சென்னையில் மாணவர்கள் சிலர் கையில் அரிவாள்களுடன் பேருந்தில் நுழைந்து, இரண்டு மாணவர்களை விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதே போல் மற்றொரு அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் கல்லூரி மாணவர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குகின்றனர்.

அத்துடன் குறிப்பிட்ட பேருந்து ரூட்டு சிறந்தது என்று கூறுமாறு வற்புறுத்துகின்றனர். அவரும் அவர்களுக்கு பயந்து அவ்வாறே கூறுகிறார். இந்த வீடியோ பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கல்லூரி மாணவர்களிடையே பேருந்து ரூட்டு தொடர்பான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், அதன் தீவிரத்தன்மை பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்