பல முறை கூப்பிட்டேன்... ஆனால் அவளோ? மனைவியை கொலை செய்த கணவனின் வேதனையான வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த கணவன், அவரை எத்தனை முறை கூப்பிட்டும் குடும்பம் நடத்த வரவில்லை, என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் குருமுனீசுவரன். இன்ஜினியரான இவருக்கு ரதிதேவி என்ற மனைவியும், இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.

ரதிதேவி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், குழந்தைகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு காரியாபட்டியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது தான் அவருக்கு மதுரையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசியர் வேலை கிடைத்துள்ளது.

இதனால் நேற்று முன் தினம் இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென்று வகுப்பிற்குள் ஹெல்மேட் அணிந்த படி உள்ளே நுழைந்த அவரது கணவர் ஸ்க்ரு டிரைவரால், அவரை கொடூரமாக குத்தி கொலை செய்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அலறி அடித்து ஒடினர். அதன் பின் குரு முனீசுவரன் அருகிலிருந்த காவல்நிலையத்தில் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.

அதன் பின் பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிவிட்டது.

ஆனால் அவள் என்னுடன் சரியாக குடும்பம் நடத்தவில்லை, அடிக்கடி அவள் அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவாள். இதனால் அவளை சென்று அழைத்தால், வரவே மாட்டார்.

எத்தனையோ முறை சொந்தக்காரர்களை வைத்து பேசி பார்த்தோம், பலமுறை கூப்பிட்டு பார்த்தோம், ஆனால் அவள் குடும்பம் நடத்த வரவில்லை. இதனால் ரதி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

திருமங்கலத்தில் ஸ்கூலில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன். அதனால் அந்த ஸ்கூலிலேயே வைத்து கொலை செய்ய முடிவு செய்தேன்.

ஹெல்மட்டில் கத்தி, ஸ்குரூடிரைவர் மறைச்சு வெச்சு எடுத்துட்டு போனேன். என்னை பார்த்ததுமே ரதி அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் நான ஹெல்மெட்டால் ஒரே போடு போட்டு, கத்தியாலும் குத்தி கொன்றுவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்