ரயில் பயணத்தில் தூக்க கலக்கத்தில் இருந்த இளம்பெண்.. அதிகாலையில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் இருந்து விரைவு ரயில் மூலம் மதுரைக்கு சென்ற பெண் ஒருவர் தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து இறங்கிய நிலையில் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் இருந்து திருநெல்வேலி வழியாக கேரளா செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் பூர்ணிமா என்ற பெண் பயணி தனது 2 மகன்களுடன் மதுரைக்கு சென்றுள்ளார்.

ரயில் இன்று அதிகாலை மதுரையை சென்றடைந்த நிலையில், உறக்கத்தில் இருந்த பூர்ணிமா ரயில் புறப்படும் நேரத்தில் விழித்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

பூர்ணிமா தூக்கக்கலக்கத்தில் இருந்த நிலையில், தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சக பயணிகள் உடனடியாக அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

உடனடியாக அங்கு வந்த ரயில்வே காவல் துறையினர், ரயில் நடைமேடையில் பெண் சிக்கிக் கொண்டது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பெண் பயணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவரை மீட்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், நடைமேடையை உடைத்து நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அப்பெண் பயணியை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட பூர்ணிமா ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்