மணமகன் சொன்ன ஒரு வார்த்தை! திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண் செய்த செயல்... குவியும் பாராட்டு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் பெங்களூரில் தனது திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டு தனது தாய்க்கு சிறுநீரகத்தை தானம் செய்த மகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த இளம் பெண் இந்தியாவின் பெங்களூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அப்பெண்ணின் தாய்க்கு சிறுநீரகங்கள் செயலிழந்தது. இதையடுத்து உடனடியாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்த சமயத்தில் அப்பெண்ணுக்கு, இளைஞர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது,

அப்போது தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தாய்க்கு தானம் அளிப்பது குறித்து வருங்கால கணவரிடம் அவர் கூற அதற்கு அவர் தானம் அளிக்கக்கூடாது என கூறினார்.

இதனால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திய இளம்பெண் கடந்த 21ஆம் திகதி தனது சிறுநீரகத்தை தாய்க்கு தானமாக கொடுத்துள்ளார்.

சிகிச்சைக்கு பின்னர் தாயும், மகளும் தற்போது நல்லபடியாக உள்ளனர்.

இது குறித்து அறுவை சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகையில், பொதுவாக திருமணமாகாத பெண்களின் சிறுநீரகத்தை நாங்கள் தானமாக ஏற்கமாட்டோம். ஏனெனில் அது அவர்களின் மண வாழ்க்கையை பின்னாளில் பாதிக்கலாம்.

ஆனால் இந்த பெண் தனது தாயை காப்பாற்ற வேண்டும் என்று எங்களை மிகவும் வலியுறுத்தியதால் ஏற்று கொண்டோம் என கூறியுள்ளனர்.

இதனிடையில் தன் மகளை நினைத்தால் பெருமையாக உள்ளது சிறுநீரக தானம் செய்தவரின் தந்தை உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்