ஜெயலலிதா உயிர் பிரிந்தது எப்போது? அம்பலப்படுத்திய உலகக் கோப்பை கணித்த ஜோதிடர்

Report Print Basu in இந்தியா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறாரதா என்பது குறித்து உலகக் கோப்பை துல்லியமாக கணித்து பிரபலமடைந்த சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா, 2016 டிசம்பர் 5ம் தேதி திங்கட்கிழமை இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தற்போதைய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் மீண்டும் முதலமைச்சர் பழனிசாமியுடன் இணைந்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு பேரில் அமைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா இறந்தது திங்கள் கிழமை இல்லை என உலகக் கோப்பை துல்லியமாக கணித்த சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஜெயலலிதா திங்கட்கிழமை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் ஞாயிற்றுக்கிழமை மதியமே இறந்திருப்பார், இறந்த தேதி வேறுபடும், இது எனது அனுமானமே என ஜோதிடர் பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்