உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான் தான்! முதல்வர் பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி

Report Print Kabilan in இந்தியா

கர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான் தான் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி, நான்கு நாட்கள் நிலுவைக்கு பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதன்மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்ததால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் வஜூபாய் லாலவிடம் ராஜினாமா கடிதத்தை குமாரசாமி அளித்ததைத் தொடர்ந்து, அவரது கடிதம் ஏற்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறுகையில், ‘நான் நிம்மதியாக இருக்கிறேன். உலகின் மிகவும் மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான் தான் என்பதை உணர்கிறேன். இதனால் நான் ஓய்வு பெற மாட்டேன். தொடர்ந்து போராடுவேன். பொறுத்திருந்து பாருங்கள்’ என தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்