குழந்தை பிறக்காததால் வேறு நபருடன் ஓட்டம் பிடித்த மனைவி! 11 வயது அதிகமானவரை மணந்ததால் விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மனைவி வேறு நபருடன் ஓட்டம் பிடித்ததாலும், தாய் மாயமானதாலும் ஏற்பட்ட விரக்தியால் நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (39). இவரது மனைவி லலிதா (28). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு லலிதா, மணிகண்டனை பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டார்.

மணிகண்டன் தனது தாய் திலகாவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயும் மாயமாகி விட்டார்.

மனைவி, தாய் ஆகியோர் சென்றதால் மணிகண்டன் மிகுந்த தனிமையில் மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

அதன்படி மதுக்கடைக்கு சென்று அதிகளவு மது அருந்திய மணிகண்டனுக்கு போதை தலைக்கேறியது. பின்னர் ரயில் நிலையத்துக்கு வந்த மணிகண்டன் அங்குள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் தண்டவாளத்தை விட்டு வர மறுத்து விட்டார்.

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மணிகண்டனை வீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

மனைவி மற்றும் தாயின் பிரிவால் வாடிய மணிகண்டன் அனைவர் முன்னிலையிலும் கதறி அழுதது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்