சூர்யாவின் கருத்துக்கள் வரவேற்கத்தகுந்தவை.. அவர் பேசினாலே மோடி கேட்பார்! ரஜினிகாந்த்

Report Print Kabilan in இந்தியா

புதிய கல்விக் கொள்கை குறித்து பேசிய சூர்யாவின் கருத்தை தான் ஆதரிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

அப்போது அவர் புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்தை தான் ஆதாரிப்பதாக தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக பேசிய அவர் கூறுகையில்,

‘சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து சர்ச்சை ஆனது. ரஜினிகாந்த் இதே கருத்தை பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார் என்று இங்கே கூறினார்கள். சூர்யா பேசினாலே மோடி கேட்பார்.

அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார். எனவே, மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது.

எனவே அவர் பேசும் கருத்துக்கள் வரவேற்கத்தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers