சூர்யாவின் துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும்! சீமான் ஆவேசம்

Report Print Kabilan in இந்தியா

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து துணிச்சலாக சூர்யா பேசியது போல், மற்றவர்களும் வெளியில் வந்து பேச வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்தது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவரது விமர்சனத்திற்கு ஆதரவாக பெரும்பாலானோரும், எதிராக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆதரவினை சூர்யாவிற்கு தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பின் பேசிய அவர் கூறுகையில்,

‘தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பாராட்டுதலுக்குரியது. அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். பஞ்ச் டையலாக் படத்தில் பேசினால் போதாது, வெளியில் வந்து பேச வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers