70 ஆயிரம் கடன் தொகைக்காக 24 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு

Report Print Vijay Amburore in இந்தியா

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.70 ஆயிரம் கடன் தொகைக்காக 24 ஆண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து வந்த குடும்பத்தினரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு செங்கல் சூளைகளில் ஒப்பந்த அடிப்படையில் 10 பேர் பல வருடங்களாக கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர் என, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் பொலிஸாருடன் அங்கு விரைந்த அதிகாரிகள் 3 குழந்தைகள் உட்பட 10 பேரையும் மீட்டெடுத்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரூ. 70,000 கடன் தொகைக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் 24 வருடங்கள் கொத்தடிமையாக வேலை செய்துள்ளனர்.

3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ரூ.1.5 லட்சம் கடன் தொகைக்காக ஒரு வருடம் கொத்தடிமையாக இருந்துள்ளனர்.

மேலும், அவர்களை கொடுமைப்படுத்தி 24 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யுமாறும் அதன் உரிமையாளர் வற்புறுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...