கடை உரிமையாளரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்: பதற வைக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

சேலம் மாவட்டத்தில் ஜவுளி கடைக்குள் புகுந்து அதன் உரிமையாளரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வேலு தங்கமணி என்பவர் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நிர்வாகியாக இருந்து வரும் வேலு தங்கமணி, கடந்த 16ம் திகதியன்று கடையில் இருந்த போது, இரண்டு மர்ம நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த சதீஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers