ஒவ்வொரு தமிழர் தலைமீதும் எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலைமீதும் எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தின் மொத்த கடன் 2017-18 ஆம் நிதியாண்டில்‌ 3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக உயர்ந்திருப்பதாக, இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 594 கோடி ரூ‌பாயாக உ‌யர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தமிழக அரசின் வருவாய் வரவினங்கள் 4.31% உயர்‌ந்து ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 280 கோடி ரூபாயாக இருந்ததாக‌ தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.

இதேபோல் 2016-17 ஆண்டு முடிவில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடியாக இருந்த கடன், 2017-18 நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 7 கோடி தமிழர்கள் ஒவ்வொருவர் தலைமீதும் 46 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...