சொந்த மகனின் சடலத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை: அம்பலமான கொடூர கொலை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவிம் மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து தொல்லை அளித்து வந்த மகனை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தந்தை ஒருவர் பொலிசாரிடம் சரண் அடைந்துள்ளார்.

ஒரு இரவு முழுவதும் மகனின் சடலத்திற்கு காவல் இருந்த பின்னரே 71 வயதான தாமோதர் பலாபுரே தமது குடும்பத்தாருக்கு நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மது போதையில் கலாட்டாவில் ஏற்பட்ட 38 வயதான சஞ்சய் என்பவரே சொந்த தந்தையால் கொல்லப்பட்டவர்.

இருசக்கரவாகனம் ஒன்று வாங்க 25,000 ரூபாய் தர வேண்டும் என கூறியே சஞ்சய் குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பணம் தர மறுத்தால் பெற்றோரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனிடையே மகன் தூக்கத்தில் இருந்த வேளையில் தாமோதர் வாளால் கழுத்தில் வெட்டியுள்ளார்.

பின்னர் கொல்லப்பட்ட மகனின் சடலத்தின் அருகே விடியும்வரை காவல் இருந்துள்ளார். பகலில் மருமகனை அழைத்து தகவல் தெரிவித்ததுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

மர வேலை செய்துவரும் தாமோதர் மற்றும் சஞ்சய், கிடைக்கும் பணம் முழுவதும் மதுவுக்கு செலவிட்டு வருவதில் மகனுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மட்டுமின்றி, தமது பண தேவைக்காக பெற்றோரை தொடர்ந்து தொல்லைப்படுத்தியும் வந்துள்ளார்.

மனைவியின் தந்தையை கொல்லப்பட்ட வழக்கில் சில காலம் சஞ்சய் சிறையிலும் இருந்து வந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers