ஆணவக்கொலைக்கு பயந்து தினம்தினம் ஓடி ஒளியும் காதல் ஜோடி

Report Print Vijay Amburore in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு பொலிஸாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த நந்தா (23) என்கிற இளம்பெண் பிஎஸ்சி நா்சிங் முடித்து தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாக வேலை செய்து வந்த அருண்(26) என்கிற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு நந்தாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் முறைப்பையனுக்கு நந்தாவை திருமணம் செய்துவைக்கவும் மும்மரம் காட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நந்தா வீட்டைவிட்டு வெளியேறி அருணை திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் நாகர்கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து நந்தாவின் உறவினர்கள் காதல் ஜோடி செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து சென்றிருக்கின்றனர். இதனால் உயிருக்கு பயந்த காதல் ஜோடி தினம்தினம் தப்பி நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இருவரும் மாவட்டம் எஸ்பியை சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers