லட்சக்கணக்கில் சம்பாதிக்கப்போகும் தமிழ் பெண்... வேண்டாமுக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெற்றோரால் வேண்டாம் என்று பெயர் வைக்கப்பட்ட மாணவி இன்று வெளிநாட்டி கம்பெனியால் லட்சகணக்கில் சம்பாதிக்கவுள்ள நிலையில், அவரை மாவட்ட ஆட்சியர் அழைத்து கெளரவித்துள்ளார்.

திருத்தணியை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்த தம்பதி அசோகன் - கௌரி. இவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால், அடுத்து பிறக்கப்போகும் குழந்தையாவது மூன்றாவது குழந்தையாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

ஆனால் மூன்றாவது குழந்தையும் பெண்ணாகவே பிறந்ததால், அந்த குழந்தைக்கு வேண்டாம் என்று பெயர் வைத்தனர். அதாவது இனி பெண் குழந்தை வேண்டாம் என்பதற்காகவே அவர்கள் அந்த குழந்தைக்கு இப்படி ஒரு பெயரை வைத்துள்ளனர்.

இந்த பெயரை வைத்து அவரை பலரும் கிண்ல் செய்து வந்துள்ளனர். ஆனால் அவர் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கேலில், கிண்டல்கள் அனைத்தையும் தாண்டி கல்வியில் தன்னுடைய திருமைபை நிரூபித்தார்.

தற்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் வேண்டாமை, ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்று ஆண்டிற்கு 22 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு எடுத்துள்ளது.

பெற்றோரால் வேண்டாம் என்று கூறப்பட்ட அந்த குழந்தை தான் தற்போது பெற்றோருக்கு வேண்டும்..வேண்டும் என்றளவிற்கு சம்பாதித்து கொடுக்கவுள்ளார்.

இது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக, அவரை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அழைத்து பாராட்டியுள்ளார்.

அதோடுமட்டுமின்றி பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற சிறப்பு திட்டத்திற்கு மாணவி வேண்டாமை தூதுவராக நியமித்தும் ஆட்சியர் மகேஸ்வரி கெளரவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers