பிஞ்சு குழந்தையை கட்டி போட்டு இளைஞர் செய்த செயல்: நெஞ்சை உருக வைக்கும் வீடியோ

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில்,நாட்டில் மதத்தின் பெயரில் தாக்குதல் நடத்துப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.

குறிப்பாக, சிறுபான்மையினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்படுவது இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக, ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற சொல்லி சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது, அந்த வரிசையில் தற்போது, பிஞ்சு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குறித்த வீடியோவில், பிஞ்சு குழந்தையின் கையை கட்டு போட்டுள்ள இளைஞர் ஒருவன், ஜெய் ஸ்ரீ ராம் கூறும் படி சரமாரியாக அடித்து துன்புறுத்துகிறார். தான் மீது ஏன் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை கூட அறிய முடியாத குழந்தை, வலி தாங்க முடியாமல் கதறி அழுகிறது.

எனினும், அதை கண்டுக் கொள்ளாத இளைஞர் தொடர்ந்து குழந்தையை தாக்குகிறான். இச்சம்பவம், எங்கு, எப்போது நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சமூக வலைதளத்தில் குறித்த வீடியோவை காணும் பலர், மிகுந்த வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்று மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் தொடரும் தாக்குதல்களை ஒழிக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers