சிறையிலிருந்து வெளியில் வரும் சசிகலா! இதனால் பதற்றத்தில் இருக்கும் அந்த நபர் யார்?

Report Print Raju Raju in இந்தியா

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாவார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அது அதிமுகவுக்கும், பாஜகவுக்கு நிம்மதியை தரும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

அவர் சிறைக்குள் சென்ற நாளிலிருந்து நடந்த விடயங்கள் ஒன்று கூட அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை.

அரசியல் ஒரு பக்கம் என்றால், குடும்ப சூழல் அதற்கு மேலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சொத்து பிரச்சனை தான்.

டிடிவி தினகரனை தவிர்த்து, விவேக், நடராஜன் குடும்பத்தார், கிருஷ்ணபிரியா, அனுராதா உள்ளிட்டோர் எத்தனையோ முறை குடும்ப விடயங்களை கொண்டு போய் சசிகலாவிடம் முறையிட்டுள்ளனர்.

இதோடு விவேக்-தினகரன் மோதல் போக்கு இன்னமும் நீடித்து வருகிறது. தினகரனின் செயல்பாட்டால் அமமுகவும் கரைந்துவிட்டது.

அதனால் எப்படியும் சசிகலாவுக்கு தினகரன் மீதுகோபம் உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் தோல்வியில் இருந்தே மீள முடியாத நிலையில் சசிகலா உள்ள நிலையில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சமயத்தில் தான் நன்னடத்தை விதி காரணமாக சீக்கிரமாக விடுதலை ஆவார் என்று கூறப்படுகிறது.

சசிகலா விரைவில் விடுதலை ஆவார் என புகழேந்தி கூறியுள்ளனர்.

ஒருவேளை தினகரனுடன் சசிகலாவுக்கு மோதல் போக்கு உருவானால் அது சசிகலாவும் மேலும் அவப்பெயரை ஏற்படுத்தலாம், இது தினகரனுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி எதுவும் நடக்காவிட்டாலும், அதனை உருவாக்க அதிமுகவே ஏதாவது வேலையில் இறங்கலாம்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சசிகலா சிறைல் இருந்து வெளியில் வருவதை அதிமுகவும், பா.ஜ.கவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் என்றே கூறலாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers