எனக்கு படத்தில் நடிக்க ஆசை.... குழந்தைக்கு சப்பாத்தி மீது ஆசை - கடத்தல் குறித்த பெண்ணின் வாக்குமூலம்!

Report Print Abisha in இந்தியா

4வயது சிறுமி கடத்தியது எப்படி என்பது குறித்து கடத்தலில் ஈடுபட்ட ஜோடி வாக்குமூலம் அளித்துள்ளது.

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த அருள்ராஜ், மருத்துவர் நந்தினி தம்பதியினரின் 4வயது குழந்தையை அவர்கள் வீட்டில் பணி செய்த பெண் கடத்தி வைத்து நாடகமாடினார். பின்னர் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பணிப்பெண்ணும் அவரின் காதலரும் பிடிபட்டனர்.

இந்நிலையில் குழந்தையை கடத்தியது எப்படி என்பது குறித்து பணிப்பெண் அம்பிகா பொலிசாருக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியது, சிறுமிக்கு சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்கும் எனவே அவரை பள்ளியில் இருந்து வந்ததும், வீட்டில் சப்பாத்தி இல்லை வெளியில் சென்று சாப்பிடலாம் என்று கடத்தி சென்று மறைத்து வைத்துள்ளார்.

அவரது காதலரான கலிமுல்லா யூ-டியுப்பை பார்த்து எப்படி கடத்தலாம் என்பது குறித்து கற்றுகொண்டு குழந்தையை கடத்தி பணம்பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், அம்பிகாவிற்கு படத்தில் நடிக்க ஆசை இருந்ததும் இதனால் அதிகம் பணம் தேவைபட்டதால் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் இருவரும் காவல் நிலையத்திலையே ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டியவாறே சண்டையிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers