லட்சாதிபதியாக நினைத்து வீட்டு வேலைக்கார பெண் செய்த செயல்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக லட்சாதிபதியாக நினைத்த பெண், வீட்டில் வேலை பார்த்த குழந்தையையே கடத்தி நாடகம் ஆடியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை செனாய் நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சாப்ட்வேர் இன்ஜினீயரான இவருக்கு நந்தினி என்ற மனைவியும், அன்விகா என்ற மகளும் உள்ளனர்.

இதில் நந்தினி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர்களின் வீட்டில் வேலை பார்க்கும் விராலிமலையைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணும், மகள் அன்விகாவை, திடீரென்று காரில் வந்த மர்பநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் குழந்தை மற்றும் வேலைக்கார பெண் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அப்போது அந்த காரின் எண்ணைக் கொண்டு டிராக் செய்துள்ளனர். இதற்கிடையில் வேலைக்கார பெண் வைத்திருந்த மொபைல் போனிலிருந்து பேசிய கடத்தலில் ஈடுபட்ட நபர் 60 லட்சம் ரூபாய் கொடுத்தால், உன் மகளையும், வேலைக்கார பெண்ணையும் விட்டுவிடுகிறோம்.

அதை விட்டு விட்டு பொலிசுக்கு சென்றால், மகளை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்ட, அவர்கள் பதற்றமடைந்துள்ளனர். இருப்பினும் கடத்தல்காரன் மிரட்டிய விவகாரத்தை பொலிசாரிடம் கூறியதால், அந்த மொபைல் போனில் சிக்னலை பொலிசார் பின் தொடர்ந்துள்ளனர்.

அப்போது முதலில் கோவளத்தில் இருந்த அந்த சிக்னல், அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்து புழல் நோக்கி வருவதைக் கண்ட பொலிசார், அங்கு ஒரு டீம்மை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து அங்கு கிடைத்த செல்போன் சிக்னலை வைத்து பொலிசார் வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த நபர் தன்னுடைய பெயர் முகமது கலிபுல்லா சேட் எனவும், இதற்கு மூளையாக செயல்பட்டதே வேலைக்கார பெண் அம்பிகா தான் என்ற திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

அதன் பின் இவர்கள் இருவர் பற்றியும் பொலிசார் விசாரித்த போது, அம்பிகா, இணையதளத்தில் வீட்டு வேலைக்காகப் பதிவுசெய்துள்ளார்.

அந்த நேரத்தில் தான்அருள்ராஜ், அவரை கடந்த 25 நாள்களுக்கு முன் வீட்டு வேலைக்குச் சேர்த்துள்ளார். வீட்டிலேயே தங்கியிருந்த அம்பிகா, அருள்ராஜ்-நந்தினி சொகுசாக வாழ்வதைப் பார்த்து அதே போன்ற சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

இதற்கு முன் முகப்பேரில் இருக்கும் உணவகம் ஒன்றில் சில ஆண்டுகல் வேலை பார்த்த போது, லிபுல்லா சேட்டுவின் பழக்கம் கிடைக்க, அவரை இந்த கடத்தலுக்கு பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...