இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த தமிழருக்கு லட்சக்கணக்கில் பரிசு

Report Print Vijay Amburore in இந்தியா

இன்ஸ்டாகிராமில் இருந்த குறைபாட்டை கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு 30 ஆயிரம் டொலர்களை பரிசாக அளித்து அந்நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த லக்‌ஷ்மண் முத்தையா என்பவர் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரின் அனுமதி இல்லாமலேயே அவரின் தனிப்பட்ட தகவல்களை எடுக்க முடியும் என்பதை கண்டறிந்து பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் அவர் அனுப்பிய அறிக்கையில் தெளிவான தகவல் இல்லாததால், நடவடிக்கை எடுக்க முடியாமல் பேஸ்புக் நிறுவனத்தினர் திணறியுள்ளனர்.

அதன்பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறை இருப்பதை மின்னஞ்சல் மற்றும் வீடியோ சாட்சியமாக எடுத்து அனுப்பியுள்ளார்.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு குழுவினர் உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்தனர். மேலும் இதனை கண்டுடிபித்து கூறிய முத்தையாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களை (20.56 லட்சம்) பரிசாக அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...