சிக்கன் பக்கோடா கேட்டு கையை கடித்த குழந்தை... ஆத்திரத்தில் கொன்று புதைத்த கொடூரன்

Report Print Abisha in இந்தியா

சிக்கன் பக்கோடா கேட்ட குழந்தையை கொன்று புதரில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே தனியார் 'ஹாலோ பிளாக்' என்ற தொழிற்சாலை உள்ளது. அங்கு 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒருவர்தான் அமீத் என்பவர். இவரது பூர்வீகம் ஒடிசா என்று கூறப்படுகிறது. வேலை காரணமாக அவர் இங்கு தங்கி உள்ளார்.

அவரது மகள் இஷானி (4) கடந்த 14ஆம் திகதி காணமல் போனதாக பொலிசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அருடன் இருப்பவர்களும் பக்கத்தில் பல இடங்களில் தேடி உள்ளனர்.

இந்நிலையில், மறுநாள் காலை சூளையின் பின்னால் உள்ள முட்புதரில் சிறுமி இறந்த நிலையில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைக்கு உடலெங்கும் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து உடனடியாக பொலிசாருக்க தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரித்தும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிசார் திணறினர். இந்நிலையில், 4 நாள் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையாளியை கண்டுபிடித்துவிட்டனர். அதே தொழிற்சாலையில் வேலை செய்து வரும், நிலக்கர் என்பவர்தான் குழந்தையை கொன்றார் என்பதும், இவர் அமீத்தின் சொந்தக்காரர் என்பதும் தெரியவந்தது.

நிலக்கர்தான் விசாரணையில் தெரிவித்தது, இஷானியை வழக்கமாக மாலை வேளையில், வெளியில கூட்டிட்டு போனேன். கடந்த 14ம் திகதி மாலையும் அப்படித்தான் வெள்ளவேடுக்கு அழைத்து சென்றேன். அங்கு ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தினேன். அதன்பின், சிக்கன் பக்கோடா வாங்கி கொண்டு இஷானியை திரும்ப அழைத்து வந்தேன். வழியில், சிறிய பாலத்தின் சுவரில் இஷானியை உட்கார வைத்துவிட்டு, நான் மட்டும் சிக்கன் பக்கோடா சாப்பிட்டேன். அப்போது அவள், 'எனக்கும் சிக்கன் பக்கோடா கொடு' என்று கேட்டாள்.

நான் தர மறுத்தேன். அதனால் என் கையை பிடிச்சி அவள் கடித்தாள். இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது. உடனே இஷானி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். ஆனால் அவள் பாலத்தின் சுவரில் இருந்து கீழே விழுந்துவிட்டாள். அப்போது முகமெல்லாம் அவளுக்கு காயங்கள் ஏற்பட்டது. அப்படியே இறந்துவிட்டார்.

இதை பார்த்து நான் பயந்துபோய். உடனே, அவளது உடலை தூக்கிவந்து சூளைக்கு பின்னாடி உள்ள முள் புதரில் எறிந்துவிட்டேன்" என்றார். வாக்குமூலத்தின்பின் பொலிசார் கைது செய்து அவரை சிறையில் அடைந்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers