வெளிநாடுகளில் கொடிகட்டிப்பறந்த சரவணபவன் ராஜகோபால்: வருமானம் மட்டும் எத்தனை மில்லியன் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

பெண் சபலத்தால் சரிந்தாலும், சரவணபவன் ராஜகோபால் தன்னுடைய கிளைகளை உலகெங்கும் பரப்பி பல மில்லியன் சம்பாதித்துள்ளார்.

தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியின் மரணம் தான், ஒரு மிகப் பெரிய தொழில்பதிபர் பெண் சபலத்தால் சரிந்தது தான் இப்போது ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

பெண்கள் விஷயத்தில் ராஜகோபால் சரிந்திருந்தாலும், அவர் தன்னுடைய தொழில் விஷயத்தில் தெள்ளத் தெளிவாக இருந்திருக்கிறார். அவரின் ஹோட்டல்களில் சமைக்கப்படும் வெண்பொங்கலுக்கும், இட்லிக்கும் சட்னிக்கும் மயங்காத மக்களே இல்லை.

சரவணபவன் ஹோட்டலில் தரப்படும் அனைத்து உணவுகளுமே மிகுந்த ருசியுடனும் தரமானதாக இருக்கும். அப்படி இவரின் முதல் உணவகம் தமிழ்நாடு சென்னையில் துவங்கப்பட்டது என்றாலும், தற்போது உலகளவிலும் இவருக்கு கிளைகள் உள்ளன.

இந்தியாவில் இந்தியாவில் 39 கடைகளும், இதில் குறிப்பாக 20 உணவகங்கள் சென்னையிலும், மீதம் மற்றும் மற்ற நகரங்களில் உள்ளது, வெளி நாடுகளில் 43 உணவகங்களும் உள்ளன.

வெளிநாட்டில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, ஓமன், கனடா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, சிங்கப்பூர், பக்ரைன், ஐக்கிய எமிராட்ஸ், லண்டன், அமெரிக்கா, குவைத், சவுதி அரேபியா, கென்யா சவுத் ஆப்பிரிக்கா, கட்டார், ஹாங்காங், தாய்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளில் உணவங்கள் உள்ளன.

கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்டும், இந்த உணவகத்தில் இந்தியாவில் 8700 பேர் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இந்த உணவகத்தின் ஆண்டு வருவாய் மட்டும் 2017ம் ஆண்டின் படி, 29,782.4 மில்லியன் ரூபாயாகும். டொலரில் மட்டும் 430 மில்லியன் என தெரிவிக்கப்பட்டது.

இப்படி தொழில் விஷயத்தில் கொடிகட்டி பறந்த நம்ம அண்ணாச்சி, இறுதியில் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பது போல் சரிந்துவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers