இரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபாலின் உடல்நலப்பிரச்சனை குறித்து தெரியவந்துள்ளது.

சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் ஜீவஜோதி என்ற பெண்ணை மூன்றாம் திருமணம் செய்ய நினைத்த நிலையில் அதற்கு இடையூறாக அவர் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் இருப்பார் என எண்ணினார்.

இதையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதியில் வைத்து சாந்தகுமார் கொல்லப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் ராஜகோபால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு முதலில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

ஜூலை 7ஆம் திகதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் கூறிய நிலையில் உடல்நலக்கோளாறு காரணமாக ராஜகோபால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையில் ராஜகோபாலின் உடல்நலப்பிரச்சனை குறித்து சரவண பவனின் முக்கிய அலுவலர் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ராஜகோபாலுக்கு இரண்டாவது மனைவி கிருத்திகாவுடன் பெரியளவில் சண்டை நடந்தது, நெருங்கிய ரத்த சொந்தங்களால் தான் அவரின் நிம்மதி பறிபோனது.

அவர் மீதான வழக்கு சரியாக செல்வதாகவும், பிரச்சனை ஏதும் இல்லை எனவும் சொல்லியே அவரை ஏமாற்றிவிட்டனர்.

இப்போது கூட அவருடன் உறவினர்கள் இல்லை, நாங்கள் மட்டுமே உள்ளோம்.

ராஜகோபாலுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயக் கோளாறு, நுரையீரல் பிரச்னைகள் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...