4 நாட்களாக மாயமாகியிருந்த மகன்: பெற்ற தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்

Report Print Vijay Amburore in இந்தியா

தேனி மாவட்டத்தில் பெற்ற தாயே திட்டமிட்டு மகனை படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கீதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஹரிஸ் என்கிற மகன் இருக்கிறான். ஹரிஸ் கீதாவின் பெற்றோர் வீட்டில் தங்கி அருகாமையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

ஞாயிற்றுக்கிழமையன்று தெருவில் விளையாடி கொண்டிருந்த ஹரிஸ் அன்று மாலை வீடு திரும்பாததால், கீதாவின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது ஊரில் உள்ள மயானம் அருகே, சிறுவன் ஹரிஸ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளான். அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், கொலையாளி குறித்து விசாரித்த போது, பெற்ற தாயே கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கணவர் தன்னை விட்டு பிரிந்த பிறகு அதேபகுதியை சேர்ந்த உதயன் என்பவருடன் கீதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தன்னுடைய தங்கை புவனேஸ்வரி மற்றும் அவரது கணவன் கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.

தனக்கும் உதயனுக்கும் இடையே உள்ள உறவிற்கு ஹரிஸ் தடையாக இருப்பானோ என கருதிய கீதா, தங்கை மற்றும் கணவருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி கார்த்திக் அவனை மயானத்திற்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக்கொலை செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கீதா, உதயன், புவனேஸ்வரி மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers