டோனி ஒய்வு பெறுவது எப்போது? உலகக்கோப்பை முடிவுகளை முன்னரே புட்டு புட்டு வைத்த தமிழர் கணிப்பு

Report Print Raju Raju in இந்தியா

டோனி எப்போது தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்பது குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் கணித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையுறுதியில் தோல்வியடைந்தது.

இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி எப்போது வேண்டுமானாலும் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை முடிவுகள் பலவற்றை பல மாதங்களுக்கு முன்பே துல்லியமாக கணித்து மக்களிடையே புகழ்பெற்றுள்ள டிரண்டிங் ஜோதிடர் பாலாஜிஹாசன் டோனி ஓய்வு முடிவை குறித்தும் கணித்துள்ளார்.

பாலாஜிஹாசன் கூறுகையில், டோனி உடனடியாக எல்லாம் ஓய்வு பெற வாய்ப்புகள் இல்லை.

அவர் ஜாதகப்படி லக்னாதிபதி தனுசு ராசியில் உள்ளார், இதனால் 2019 குருபெயர்ச்சிக்கு பின்னர் டோனி அவர் ஓய்வை அறிவிப்பார்.

அதாவது, நவம்பர் அல்லது டிசம்பரில் டோனி ஓய்வை அறிவிப்பார், அப்படி இல்லையென்றால் டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் ஓய்வை அறிவிப்பார்.

இன்றோ நாளையோ ஓய்வு முடிவை அறிவிக்கும் வாய்ப்புகள் டோனியின் ஜாதகப்படி இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்